சில்லறை வணிகத்தை அழிக்கும் உற்பத்தியாளர்களை கண்டித்து விநியோகஸ்தர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சில்லறை வணிகத்தை அழிக்கும் உற்பத்தியாளர்களை கண்டித்து விநியோகஸ்தர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி சில்லறை வணிகத்தை அழிக்கும் உற்பத்தியாளர்களை கண்டித்து விநியோகஸ்தர்கள் சென்னையில் சனிக்கிழமையன்று (டிச.13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரம்பரிய வணிக மீட்பு ஆர்ப்பாட் டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் விநி யோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு மாநிலத் தலைவர் எம்.வெங்க டேஷ் தலைமையில் ஆயிரக்கணக் கான விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். பற்பசை முதல் கொசு வர்த்தி வரையிலான அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக கொண்டு சேர்க்கும் சில்லறை வணிகத்தின் மூலம் 90 விழுக்காடு விற்பனை நடைபெறுவதாக வும், கார்ப்பரேட் வணிகம் வெறும் 10 விழுக்காடு மட்டுமே என்றும் எம்.வெங்கடேஷ் தெரிவித்தார். வெவ்வேறு விலை நிர்ணயம் உற்பத்தியாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகம், விரைவான வர்த்தகம் ஆகியவற்றிற்கு தனித்தனி குறைந்த விலையில் பொரு ட்களை வழங்குவதால் பாரம்பரிய சில்லறை வணிகம் அழியும் நிலை உரு வாகியுள்ளது என்று கண்டனம் தெரி வித்தார். செல்போன் நெட்வொர்க் துறையில் பெருமுதலாளிகளின் ஆதிக் கத்தால் பல நிறுவனங்கள் காணாமல் போனதை உதாரணமாக குறிப்பிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வணிகத்தை அழித்தால் ஏகபோக நிலை உருவாகி அவர்களே விலையை நிர்ணயிப்பார்கள் என எச்சரித்தார். காலாவதி பொருட்கள் விற்பனை காலாவதி பொருட்களை சில்லறை வணிகர்கள் முறையாக அழிக்கும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவித்து விற்று மக்களை பாதிப் புக்கு உள்ளாக்குகின்றன என குற்றம் சாட்டினார். ஜிஎஸ்டி வரியை முறையாக செலுத்தும் சில்லறை வணிகர்கள் சர்க்கரையை கிலோ 40 ரூபாய்க்கு விற்கும் போது கார்ப்பரேட் நிறுவனங் கள் ஒரு ரூபாய்க்கு விற்பதால் அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள பல ஆயிரம் விநி யோகஸ்தர்கள் வேலைவாய்ப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். அதிகபட்ச சில்லறை விலை போன்று குறைந்தபட்ச ஆதரவு விலை யையும் நிர்ணயித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரையறை வகுக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதாகிருஷ் ணன், பொருளாளர் எம்.பழனியப்பன், மாநில துணைத் தலைவர் எம்.வசந்த குமார், முதன்மை துணைத் தலைவர் கே.ராஜகோபால், மாவட்டச் செயலா ளர் ஆர்.கோயில்ராஜ், பொருளாளர் வி.டி.வெங்கடேசன், மாவட்ட நிர்வாகி கள் ஆர்.நாராயணன், ஆர்.வெங்கடே ஸ்வர ராவ், கே.செந்தில்குமார், டி.டேனி யல் ராஜ், எம்.குமார் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%