**!
அறுசீர் மண்டிலம்.
பெண்களை முன்னேற்றும்
நாடு
புகழுறு நாடாகும்
பாடு
விண்ணுயர் சாதனைகள்
தானே
வீறுடன் பெண்கள்தான்
செய்வர்!
கண்ணெனக் காத்திடுவோம்
பெண்ணை
காலமும் சிந்திப்பார்
மண்ணில்
மண்ணதன் பெண்தானே
உயர்வு
மாநிலம் காத்திடுமே
நலமாய்!
பல்வகைத் துறைகளிலே
பெண்கள்
பாங்குடன் காண்பாரே
கண்ணாய்
நல்வகைச் செயல்களையே
செய்வார்
நலமுடன் வினைகளையே
நெய்வார்!
சொல்வகைச் சிந்திப்பார்
பெண்கள்
சொந்தமாய்ச் சிந்தனையே
காண்பார்
அல்லதை நீக்கிடுவார்
என்றும்
அகிலமே சீர்தூக்கிப்
பார்க்கும்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%