ஒற்றுமையின் உதாரணம்
இரை தேடி
தடை தாண்டி
உழைப்பின் பெருமையை
ஊருக்குச் சொல்லும்
சீரான வரிசையில்
சிரமம் தவிர்த்து
சிகரம் ஏறும்
உணவுத் தேடலை
பிறர் உழைப்பில் தேடாது
தன்னை நம்பி
தலை உயர்த்திச் செல்லும்
சின்னத் தோல்வியில்
துவண்டு போகும் மானிடா
அற்ப மாயையில்
சொற்பமாகும் மானிடா
தான் வாழப் பிறர்
உழைப்பைத் திருடும் மானிடா
முயற்சி என்னும்
ஊன்று கோலை மறந்துவிட்டு
காலத்தைக் குறை சொல்லி
வாழ்நாளை வீணாக்கி
உற்சாகத்திற்குப் பொழுது தேடுகிறாய்
உழைக்க மறந்து
உறங்கிக் கிடந்து
சுறுசுறுப்பைத் துறந்து
சுகத்தை நாடி
தன்னலம் பேணும் மனிதரிடையே
தன் பலம் உணர்ந்து
எதிர்கால வாழ்வை நினைந்து
சிகரத்திற்குக் குறி வைத்து சீராகச் செல்லும் சிற்றெறும்பு
சிந்தனை தரும் நல்விருந்து.

தமிழ்நிலா
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?