சிஎஸ்கே–திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டியில் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி அணி வெற்றி: அக்சயபிரணவ் 6 விக்கெட் வீழ்த்திய அபாரம்
திருவள்ளூர், ஜன.
சிஎஸ்கே–திருவள்ளூர் டிசிஏ இடைநிலைப் பள்ளி கிரிக்கெட் போட்டியின் சி–பிரிவு ஆட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி – மாதவரம் செயின்ட் தாமஸ் பள்ளி அணிகள் மோதின.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த செயின்ட் தாமஸ் பள்ளி அணி, ஆர்.ஆர். அக்சயபிரணவின் அதிரடி பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 10.3 ஓவர்களில் 19 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அக்சயபிரணவ் 6 விக்கெட் வீழ்த்தி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவருக்கு ஜே. வர்ஷன் (3/7) சிறப்பான துணை புரிந்தார்.
20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளை யாடிய வேலம்மாள் மேல் அயனம்பாக்கம் அணி எந்த விக்கெட்டையும் இழக்கா மல், 2.3 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்து போட்டி யை சுலபமாக கைப்பற்றியது. அக்சயபிரணவின் அதிரடி பந்துவீச்சி அந்த அணியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?