சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் அவசியம்: திருமாவளவன் வலியுறுத்தல்

சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் அவசியம்: திருமாவளவன் வலியுறுத்தல்

தூத்துக்குடி / சென்னை:

​சா​தி, மதம் பெய​ரால் நடக்​கும் கொலைகளைத் தடுக்க தனி சட்​டம் அவசி​யம் என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் கூறி​னார். நெல்​லை​யில் காதல் விவ​காரத்​தில் கொலை செய்​யப்​பட்ட கவின் செல்வகணேஷ் குடும்​பத்​தினரை, தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலத்​தில் உள்ள அவர்​களது வீட்​டுக்கு திரு​மாவளவன் நேற்று சென்று சந்​தித்​தார்.


கவின் செல்​வகணேஷ் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறிய அவர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கவின் கொலை​யில் வேறு யாரும் சம்​பந்​தப்​பட்​டிருக்​கிறார்​களா என்​பது தொடர்​பாக விசா​ரிக்க வேண்​டும். சுர்​ஜித் ஆத்​திரப்​பட்டு இக்​கொலை​யைச் செய்​ய​வில்​லை. கவினோடு நெருக்​க​மாக உறவாடி இருக்​கிறார். அந்த நம்​பிக்​கை​யின் அடிப்​படை​யில்​தான் அவர் அழைத்​தது​மே, அவரோடு கவின் போயிருக்​கிறார். நீண்​ட​கால​மாக திட்​ட​மிட்​டுத்​தான் இந்த கொலை நடந்​திருக்​கிறது.


சுர்​ஜித்​தின் பெற்​றோர் இரு​வரை​யும் விசா​ரணைக்கு உட்​படுத்​தி​னால்​தான், பின்​னணி​யில் உள்ள கூலிப்​படை​யினர் யார் என்​ப​தைக் கண்​டறிய முடி​யும். வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின்​படி, பாதிக்​கப்​பட்ட கவின் குடும்​பத்​தினருக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும். அரசு வேலை​வாய்ப்பு, நிலம் வழங்​கு​வதுடன், புதி​தாக வீடு கட்​டித் தர வேண்​டும்.


கவின் குடும்​பத்​தினரின் பாது​காப்பை உறு​திப்​படுத்த வேண்​டும். சுபாஷினி வெளி​யிட்ட வீடியோ, அச்​சுறுத்​தல் காரண​மாக வெளி​யிடப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. சாதி, மதத்​தின் பெய​ரால் நடக்​கும் படு​கொலைகளை தடுக்க சட்​டம் அவசி​யம். உச்ச நீதி​மன்​றம் இது தொடர்​பான வழி​காட்டு நெறி​முறை​களை அறி​வித்​துள்​ளது. ஆனால், எந்த மாநில​மும் இதைப் பின்​பற்​ற​வில்​லை.


நாடாளுமன்றத்திலும்... இது தொடர்​பாக நானும், ரவிக்​கு​மார் எம்​.பி.​யும் உள்​துறை அமைச்​சர் அலு​வல​கத்​தில் மனு கொடுத்​துள்​ளோம். வாய்ப்பு கிடைத்​தால் நாடாளு​மன்​றத்​தி​லும் குரல் கொடுப்​பேன். காவல் ஆய்​வாளர் மிரட்​டல் விடுத்​த​தாக கவின் பெற்​றோர் தெரி​வித்​துள்​ளனர். காவல் துறை​யினர் கட்​டப்​பஞ்​சா​யத்து செய்​வது ஏற்​புடையதல்ல. இவ்​வாறு திரு​மாவளவன் கூறி​னார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%