சபரிமலை தங்கக் கவச முறைகேடு: டிடிபி முன்னாள் தலைவருக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு
Jan 23 2026
19
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்களை கேரள உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்ற வழிகாட்டுதலில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
இதையடுத்து, தங்கக் கவச புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் ஏ.பத்மகுமாா், என்.வாசு உள்பட 12 பேரை எஸ்ஐடி கைது செய்து விசாரித்து வருகிறது.
இதனிடையே ஏ.பத்மகுமாா், டிடிபியின் முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு மற்றும் பெல்லாரியில் உள்ள நகைக் கடை அதிபா் கோவா்தன் ஆகியோா் ஜாமீன் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
அவா்கள் மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அந்த மனுக்களை நீதிபதி புதன்கிழமை தள்ளுபடி செய்தாா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?