news Breaking News
clock

சனி மஹா பிரதோஷம் வழிபாடு....

சனி மஹா பிரதோஷம் வழிபாடு....

சனி மஹா பிரதோஷம் வழிபாடு....... திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர் -5 கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வளர்பிறை சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு பால்,தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், வெட்டி வேர்,தேன், விபூதி, பஞ்சாமிர்தம், எண்ணற்ற வாசனை திரவியங்களைக் கொண்டு, மூலவர், உற்சவர்,நந்திகேச பெருமானுக்கு அபிஷேகங்கள், வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து வில்வத்தினால் அர்ச்சனை செய்து மற்றும் உற்சவர் மூன்று முறை மந்திரங்கள் ஒலிக்க ஆலயம் சுற்றி வந்தன. சங்குகள் முழங்க, மேல தாளங்கள் இசைக்க, பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாரதனையும் நடைபெற்றது. உற்சவமூர்த்திகள் காமதேனு வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. பக்தர்கள் நந்திகேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News