news Breaking News
clock

சண்முககுமாரபுரம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவொளிச் சுடர் விருது..!

சண்முககுமாரபுரம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவொளிச் சுடர் விருது..!


சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கிய பேரவை சார்பில் சண்முக திருக்குமரன் அவர்கள் எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, அறிவொளிச்சுடர் விருது வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.


தமிழகம் முழுவதும் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் கல்விப்பணியைப் பாராட்டி ஆசிரியர் தின விழாவினை முன்னிட்டு அறிவொளிச் சுடர் விருது மதுரை இலக்கியப் பேரவை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இவ்விருது இந்த ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதினை மதுரை இலக்கியப் பேரவையின் தலைவரும் நிறுவனருமாகிய முனைவர் சண்முகதிருக்குமரன் வழங்கினார்.


சண் சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வைஜெயந்திமாலா, நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் குருசாமி, உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சாமிதுரை மற்றும் பேராசிரியர் பாஸ்கரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News