கோவை மாநகரில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு

கோவை மாநகரில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு

கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்க கோவை ஒப்பணக் கார வீதியில் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை மாநகரின் முக்கிய வணிகப் பகுதியான ஒப்பணக் கார வீதியில் கனரக வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்து கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்கள் செயல்ப டும் இந்த வீதி, கோவையின் முக்கிய ஷாப்பிங் தலமாக விளங்குகிறது. உக்கடம் திசையிலிருந்து வரும் கனரக வாக னங்கள், தனியார் ஆம்னி பேருந்துகள், பாலக்காடு செல்லும் கேரள அரசு பேருந்துகள் இந்த வழியாகச் செல்வதால் அடிக் கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பா கத் திருவிழா காலங்களில் நடந்து செல்லவே இடமில்லாத அளவுக்கு வாகன நெரிசல் அதிகரிப்பதால் மக்கள் பெரி தும் அவதிப்பட்டு வந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு, கனரக வாகனங்கள் மற் றும் ஆம்னி பேருந்துகளுக்கு மாற்றுப் பாதை அறிவிக் கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் அறிவிப்புப் பல கைகள் வைக்கப்பட்டுள்ளன. தடை நேரத்தில் இந்த வீதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிப்பது, வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். இந்தத் தடை அமலானதால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்களுக்கு வசதி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ----------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%