கோவையில் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி

கோவையில் பெண்களுக்கான  இரவு நேர மாரத்தான் போட்டி


கோவை, ஜன.9-

கோவையில் பெண்களின் பாதுகாப்பு, சுய மேம்பாடு மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்கும் நோக்கில், வரும் பிப்ரவரி 22 ம் தேதி பெண்களுக்கான பிரத்தியேக இரவு நேர மரத்தான் போட்டி நடக்கிறது. இதற்கான லோகோ அறிமுக நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர காவல் ஆணையர் கண்ணன் லோகோவை அறிமுகம் செய்து வைத்தார்.

 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெம் மருத்துவமனை நடத்தும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக பெண்களுக்கான இந்த விழிப்புணர்வு முயற்சி மக்கள் மத்தியில் பெரிய அளவிலான பாதுகாப்பு உணர்வையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். மேலும், இந்த மரத்தான் போட்டியில் காவல் துறையும் பங்கேற்று பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. கோவை நகரில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தேவையான அடிப்படை வசதிகள் ஏற்கனவே உள்ளது. எதிர்காலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%