கோவில்பட்டியில் ஆடித்திருவிழாவை பந்தக்கால் நடும் விழா "
Jul 23 2025
11

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் ஆடித்திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம்,
இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் மாதம் ஆடித்திருவிழா நடைபெறுவதையொட்டி காளியம்மன் கோவில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நட்டு கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், மற்றும் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் சுரேஷ், ஜோதிபாசு, அமரேந்திரன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?