என் வாசல் காத்திருக்கிறது...
கோலமிட...நீ வருவாய் என...
என் தோட்டத்தில் பூக்கள் பூத்திருக்கின்றன...நீ புன்னகை .. புரிவாய் என...
உன் விரல் நுனிகளில் தான் .. ஒளிந்து கிடக்கின்றன...
அத்தனை ஓவியங்களும்...
நீ வைக்கும் புள்ளியில் தான் தொடங்குகிறது...
உன் மீதான பெருங் காதல்... பூமிக்கு...
மேலும்... கீழும்...
இடது...வலதுமாய்...
ஆசீர்வதிக்கிறாய்...
கலைக் களஞ்சியமாய்... மிளிர்கிறது... உன் வாசல்...
நீ தலைகுனிந்து கோலமிடுகையில் தான்...தலைநிமிர்கிறது... தமிழர் பண்பாடு.. கலாச்சாரம்...
எறும்புண்ண அரிசிக் கோலமிடும்..நீ...
என் பெருங்காதலை...
பட்டினிப் போடுகிறாய்...
அத்தனை வண்ணங்களும்... உயிர் பெறுகின்றன...
உன் விரல் நுனி தீண்டலில்...
உன் அதிகாலை படைப்பை கண்ணுறும் ஆவலில்...
மார்கழிக் குளிருடன்.மல்லுக்கட்டுகிறது...கதிரவன்...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?