news Breaking News
clock

குடும்ப அட்டை வகையை மாற்ற வாய்ப்பு

குடும்ப அட்டை வகையை மாற்ற வாய்ப்பு

சென்னை, செப்.9 -

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் அட்டை களின் வகையை மாற்றிக்கொள்ள புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களில், தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து முன்னுரிமை குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் சுமார் 2.20 கோடிக்கும் அதிக மான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை குடும்ப அட்டை, முன்னுரிமையற்ற குடும்ப அட்டை, சர்க்கரை விருப்ப அட்டை மற்றும் பொருளில்லா அட்டை என ஐந்து வகையான அட்டைகள் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பலர் முன்னுரிமை அற்ற அட்டை வைத்திருப்பதால் அவர்களுக்கு குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே கிடைக்கின்றன. எனவே அவர்கள் தங்கள் அட்டையை முன்னுரிமை குடும்ப அட்டை யாக மாற்றிக் கொள்வதன் மூலம் அரசின் முழுமையான மானியப் பலன்களையும் பெற முடியும். தகுதியானவர்கள் தேவையான ஆவணங்களுடன் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” போன்ற சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News