
தஞ்சாவூர், செப். 9-
தஞ்சை அருகே, திங்கட்கிழமை செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சை வெண்ணாற்றங்கரை பள்ளியக்ரஹாரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(53). இவர் ஞாயிற்றுக்கிழமை உதாரமங்கலத்தில் இருந்து லாரியில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு பள்ளியக்ரஹாரம் நோக்கி புறப்பட்டார். அவருடன் லாரியில் பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த தர்மன்(50), இளையராஜா (48), அழகர், அம்மன்பேட்டையை சேர்ந்த அமர்சிங் ஆகிய 4 பேரும் வந்தனர். லாரி தஞ்சை அருகே கூடலூர் பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரியில் வந்த தர்மன், இளையராஜா, அழகர், அமர்சிங் ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கஜேந்திரன் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?