கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்: ட்ரம்ப்

கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்: ட்ரம்ப்


 

டாவோஸ்: சு​விட்​சர்​லாந்​தின் டாவோஸ் நகரில் நடை​பெற்று வரும் உலகப் பொருளா​தார மன்ற மாநாட்டு கூட்​டத்​தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்​கிழமை உரை​யாற்​றி​னார். அப்​போது, கிரீன்​லாந்து தீவை அமெரிக்கா​வுடன் இணைத்துக் கொள்ள எவ்​வித ராணுவ பலத்​தை​யும் பயன்​படுத்​தப் போவதில்லை என்று அவர் உறு​திபடத் தெரி​வித்​தார்.


இதுகுறித்து அவர் பேசி​ய​தாவது: அமெரிக்​கப் பொருளா​தா​ரம் அபரிமித​மான வளர்ச்​சியை எட்​டி​யுள்ள நிலை​யில், ஐரோப்​பிய நாடு​கள் சரி​யான திசை​யில் பயணிக்​க​வில்​லை. கிரீன்​லாந்தை நிர்​வகிப்​ப​தற்​கும், அதனை பாது​காப்​ப​தற்​கும் அமெரிக்​கா​வால் மட்​டுமே முடி​யும். உலகப் பாது​காப்​பிற்​காக எங்​களுக்கு கிரீன்​லாந்து என்ற அந்​தப் பனிப்​பாறைத் தீவு தேவைப்​படு​கிறது, நீங்​கள் அதனை தர சம்​ம​தித்​தால் அதற்கு நாங்​கள் நன்​றி​யுள்​ளவர்​களாக இருப்​போம். மறுத்​தால் அதனை நாங்​கள் நினை​வில் கொள்​வோம். இந்த விவ​காரத்​தில் நேட்​டோ நாடு​கள் நியாயமற்ற வகை​யில் நடந்​து​கொள்​கின்​றன.


டென்​மார்க்​கிட​மிருந்து கிரீன்​லாந்தை வாங்​கு​வது குறித்து உடனடிப் பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட உள்​ளது. இரண்​டாம் உலகப் போரின்​போது ஆர்க்​டிக் தீவு​களுக்கு அமெரிக்கா அளித்த பாது​காப்பை மறந்​து​விட்​டு, டென்​மார்க் நன்​றி​யுணர்​வின்றி நடந்து கொள்​கிறது. உண்​மை​யில் இந்த மிகப்​பெரிய பாது​காப்​பற்ற தீவு வட அமெரிக்​கா​வின் ஒரு பகு​தி​யாகும். அது எங்​கள் பிராந்​தி​யம்.


அங்​குள்ள கனிம வளங்​களை வெட்​டி​யெடுப்​ப​தில் பல்​வேறு சிரமங்​கள் உள்​ளன. நூற்​றுக்​கணக்​கான அடி ஆழப் பனியைத் தோண்ட வேண்​டி​யுள்​ளது. ஆனால் அந்த வளங்​களுக்​காக மட்​டும் நாங்​கள் அதைக் கேட்​க​வில்​லை; தேசிய பாது​காப்​பிற்​காக அது தேவைப்​படு​கிறது. கிரீன்​லாந்தை கைப்​பற்ற ராணுவ பலத்தை பிரயோகிக்​கும் எண்​ணமில்​லை. டென்​மார்க்​கிடம் பேச்​சு​வார்த்தை மூல​மாகவே சுமூக முடிவை எட்ட விரும்​பு​கிறோம். இவ்​வாறு ட்ரம்ப் பேசி​னார்.


ஐ.நா. திறமை​யின்​மை..: அதிபர் ட்ரம்​பின் இரண்​டாம் பதவிக்​காலத்​தின் ஓராண்டு நிறைவையொட்டி வெள்ளை மாளி​கை​யில் அவர் செவ்​வாய்க்​கிழமை செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: ஐக்​கிய நாடு​கள் சபை ஒரு மகத்​தான நோக்​கத்​திற்​காக உரு​வாக்​கப்​பட்​டது. ஆனால், அது ஒரு​போதும் தனது முழுத் திறனை​யும் வெளிப்​படுத்​தி​ய​தில்​லை. அதன் காரண​மாகவே, காசா மறுசீரமைப்​பிற்​காக நாங்​கள் தற்​போது 'அமைதி வாரி​யம்' என்ற அமைப்பை உரு​வாக்​கி​யுள்​ளோம். சர்​வ​தேச விவ​காரங்​களில் ஐ.நா. சபை இன்​னும் ஆக்​கபூர்​வ​மாக​வும், சிறப்​பாக​வும் செயல்​பட்​டிருந்​தால் இத்​தகைய புதிய வாரி​யத்​தின் தேவை இருந்​திருக்​காது என்​பதே எனது எண்​ணம்.


எனது இரண்​டாவது பதவிக்​காலத்​தின் முதல் ஓராண்டு காலத்திலேயே எட்டு போர்ச் சூழல்​களை நான் முடிவுக்​குக் கொண்டு வந்​துள்​ளேன். இதில், ஒரு போரைத் தடுப்​ப​தற்​குக்​கூட ஐ.நா. சபை எனக்கு உதவ​வில்​லை. அதற்​காக நான் அவர்​களைக் குறை கூற​வில்​லை; உதவிக்​காக நான் அவர்​களை அணுக​வும் இல்​லை.


அந்​தந்த நாட்டு அதிபர்​களை​யும், பிரதமர்​களை​யும் நேரில் சந்​தித்​துப் பேசி, சுமூக​மான முறை​யில் பிரச்​சினை​களைத் தீர்த்தேன். உண்​மை​யில், நான் தீர்த்து வைத்த ஒவ்​வொரு போரை​யும் ஐ.நா. சபையே முன்​னின்று முடிவுக்​குக் கொண்டு வந்​திருக்க வேண்​டும். ஆனால், அவர்​கள் அவ்​வாறு செய்​வ​தில்​லை. இருப்​பினும், ஐ.நா. சபை தொடர்ந்து செயல்பட வேண்​டும் என்றே நான் விரும்​பு​கிறேன். ஏனெனில் அந்த அமைப்​பின் பின்​னணி​யில்​ உள்​ள நோக்​கம்​ மிக​வும்​ வலிமை​யானது. இவ்​வாறு அதிபர்​ ட்​ரம்​ப்​ தெரிவித்​தார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%