கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பூங்கா அமைக்க தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பூங்கா அமைக்க தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை:

தலை​மைச் செயலர் அறிக்கை தாக்​கல் செய்​யும் வரை கிண்டி ரேஸ் கிளப்​பிட​மிருந்து கையகப்​படுத்​தப்​பட்ட நிலத்​தில் சுற்​றுச்​சூழல் பூங்கா அமைத்​தல் உள்​ளிட்ட எந்த பணி​களை​யும் மேற்​கொள்​ளக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்​பா​யம் உத்தரவிட்டுள்​ளது.


வேளச்​சேரி ஏரி​யின் பரப்​பளவு ஆக்​கிரமிப்​பால் குறைந்​த​தாக கூறி, வேளச்​சேரி ஏரி பாது​காப்பு இயக்க துணைத் தலை​வர் குமர​தாசன், சென்​னை​யில் உள்ள தென்​மண்டல தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.


இந்த மனுவை விசா​ரித்த தீர்ப்​பா​யம், ‘அர​சால் கையகப்​படுத்​தப்​பட்ட கிண்டி ரேஸ் கிளப்​பின் 118 ஏக்​கரில் ஏரியை உரு​வாக்​கி​னால் மழை பாதிப்​பில் இருந்து வேளச்​சேரியை பாது​காக்​கலாம். இது தொடர்​பாக தமிழக அரசின் தலை​மைச் செய​லா​ளர் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்’ என உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​தது.


இந்​நிலை​யில், இந்த மனு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தீர்ப்​பாய உறுப்​பினர்​களான நீதிபதி புஷ்பா சத்​ய​நா​ராயணா, சத்​யகோ​பால் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: ரேஸ் கிளப்​பிடம் இருந்து கையகப்​படுத்​திய நிலத்​தில், 4 குளங்​களை சென்னை மாநக​ராட்சி உரு​வாக்​கி​யுள்​ளது. இந்த நிலத்​தில் சுற்​றுச்​சூழல் பூங்கா அமைக்க திட்​ட​மிடப்​பட்​டிருப்​ப​தாக தெரி​கிறது.


இதற்​காக மாநக​ராட்​சி​யிடம் நிலம் தற்​போது வரை ஒப்​படைக்​கப்​பட​வில்லை என மாநக​ராட்​சி​யின் வழக்​கறிஞர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, தமிழக அரசின் தலை​மைச் செய​லா​ளர் அறிக்கை தாக்​கல் செய்​யும் வரை, அந்த நிலத்​தில் எந்த பணி​களை​யும் மேற்​கொள்​ளக் கூடாது. இவ்​வாறு தீர்ப்​பாய உறுப்​பினர்​கள் உத்​தர​விட்​டனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%