கிணற்றை மீட்டுத் தர கிராம மக்கள் கோரிக்கை

கிணற்றை மீட்டுத் தர  கிராம மக்கள் கோரிக்கை

பெரம்பலூர், செப். 8-

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், சின்ன பரவாய் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், நாங்கள் சின்ன பரவாய் கிராமத்தில் வசித்து வருகிறோம். ஆதிதிராவிடப் பட்டியல் இனத்திற்கு சொந்தமான நத்தம் பகுதியில் 1955 ஆம் ஆண்டு கிராம மக்களின் குடிதண்ணீர் பயன்பாட்டிற்காக அன்று ஒப்பந்ததாரர் லேட்.சின்னசாமி என்பவர் கிணறு வெட்டி சுற்றுச் சுவர் வைத்து, வாளி மூலமாக தண்ணீர் இறைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செய்து கொடுத்தார். மேற்படி கிணற்றை இதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் பெரியசாமி என்பவர் 01.05.2024 ஆம் தேதி சுற்றுச் சுவரையும், தூண்களையும் உடைத்து அகற்றி விட்டு, அவர் சொந்த கிணற்றைப் போல் இரும்பு கம்பிகளால் மூடி போட்டு அவர் பயன்பாட்டிற்காக மோட்டார் போட்டு பயன்படுத்தி வருகிறார். எனவே, இந்த கிணற்றை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%