காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயமானதாக புகார் - அறநிலையத்துறை மறுப்பு
‘தங்க பல்லி’ மாயமானதாக எழுந்த புகார் முற்றிலும் பொய்யானது என அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.
காஞ்சிபுரம்,
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதோடு கோவிலில் இருக்கும் ‘வெள்ளி பல்லி’, ‘தங்க பல்லி’ சிலைகளையும் தரிசனம் செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்கிடையில், ‘வெள்ளி பல்லி’ மற்றும் ‘தங்க பல்லி’ சிலைகளை மாற்றிவிட்டு புதிய சிலைகளை அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயமாகிவிட்டதாகவும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. சம்பத் தலைமையில் 6-க்கும் மேற்பட்ட போலீசார் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்து, அங்குள்ள சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கோவிலில் பணிபுரியும் பட்டாச்சாரியார்கள், ஸ்தானிகர்கள், மணியக்காரர், கோவிலின் நிர்வாக அறங்காவலர் உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ‘தங்க பல்லி’ மாயமானதாகவும், அங்குள்ள தங்கம் மற்றும் வெள்ளியிலான பல்லி சிலைகளை கோவில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்த புகார் முற்றிலும் பொய்யானது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், பொய் புகார் அளித்ததாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?