news Breaking News
clock

கவுகாத்தி டெஸ்ட் தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

கவுகாத்தி டெஸ்ட் தோல்வியை தவிர்க்குமா இந்தியா?



இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே யான 2ஆவது டெஸ்ட் போட்டி வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசா மில் சனிக்கிழமை அன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி இந்திய வம்சாவளியான செனுரன் முத்துசாமி (109)யின் அபார சதத்தின் உதவியால் முதல் இன்னிங்சில் 151.1 ஓவர்களில் 489 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா வீரர் ஜேன்சன் (6 விக்.,) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மிக மோசமான அளவில் திணறியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (58), தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் (48) ஆகியோர் மட்டுமே 30 ரன்களுக்கு மேல் குவிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 83.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து, பாலோ ஆன் (தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸ் விளையாடுதல்) பெற்றது. ஆனால் பாலோ ஆன் கொடுக்கா மல் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2ஆவது இன்னிங்ஸில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து, டிக்ளர் செய்து இந்திய அணியின் வெற்றி இலக்காக 549 ரன்கள் நிர்ணயம் செய்தது. மிக கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மிக விரைவிலேயே தொடக்க வீரர்களை (ஜெய்ஸ்வால் (13) - ராகுல் - 6) இழந்தது. டிரா செய்யுமா இந்தியா? செவ்வாய்க்கிழமை 4ஆம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்து இருந்தது. குல்தீப் யாதவ் (4), தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் (2) ஆகியோர் களத்தில் இருந்தனர். புதன்கிழமை அன்று ஒருநாள் (5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம்) மீதமுள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 522 ரன்கள் (90 ஓவர்கள் - 540 பந்துகள்) தேவை உள்ளன. இது மிகவும் சிரமமான விஷயம் ஆகும். அதே போல தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 8 விக்கெட்டு கள் உள்ளன. இது சற்று எளிதான காரியம் ஆகும். அதனால் தென் ஆப்பிரிக்கா கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய அணி தோல்வியை தவிர்த்து டிரா செய்யுமா? அல்லது விக்கெட்டுகளை இழந்து 2-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் ஆகுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News