
பள்ளிக் கூடம் திறந்தவராம்!
பண்பால் உயர்ந்து சிறந்தவராம்!
விருதுப் பட்டியில் பிறந்தவராம்!
விடுதலை உணர்வுடன் திகழ்ந்தவராம்!
அண்ணல் காந்தியின் கொள்கையை
அறத்தின் வழியில் கொண்டவராம்!
மக்கள் தொண்டே வாழ்வெனவே
மண்ணில் விதைத்துச் சென்றவராம்!
அணைகள் பலப்பல கட்டித்தான்
அழகுத் தமிழகம் கண்டவராம்!
ஆகட்டும் பார்க்கலாம் என்றேதான்
அன்பால் சொல்லிச் வென்றவராம்!
பட்டம் படிக்காத மேதைதான்
பல்கலைக் கழகமாய் உயர்ந்திட்டார்!
அனுபவப் படிப்பில் சிறந்துதான்
அனைவரும் போற்ற வாழ்ந்திட்டார்!
மதிய உணவு தந்தவரை
மதிப்புடன் நாமும் போற்றுகிறோம்!
பிறந்த நாளைக் கல்விக்காகச்
சிறந்த நாளாய்க் கொண்டாடுகிறோம்!
மு.மகேந்திர பாபு,
தமிழாசிரியர்,
மதுரை.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?