
ஜனனி அந்தோணி ராஜின் 'பவர் பாண்டி' சிறுகதையை படித்தேன். எப்போதுமே, எந்த வேலையிலும் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
சமீபத்தில் நடந்த மிகப்பெரிய ஏர் இந்தியா விமான விபத்தில், அந்த விமானத்தில் பயணம் செய்ய வேண்டியவர், தாமதமாக வந்து அந்த விமானத்தை தவறவிட்டதால் உயிர் பிழைத்தார். இந்த உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்துக்கொண்டு சசிகலா விஸ்வநாதன் எழுதிய 'கண்முன் ஒரு காலடி ஓசை' என்ற சிறுகதை உயிரோட்டமாக. சிறப்பாக இருந்தது.
தஞ்சை அரவிந்தனின் 'திருவண்ணாமலை கோபுரங்களின் சிறப்பு' என்ற கட்டுரை மூலம் திருவண்ணாமலை ஆலய கோபுரங்கள் ஒன்பதை பற்றியும் விவரமாக அறிய முடிந்தது. ஒவ்வொரு கோபுரமும் எந்தெந்த காலத்தில் யாரால் கட்டப்பட்டது, அவற்றின் உயரமென்ன போன்ற பல தகவல்கள் இருந்தது கட்டுரையின் சிறப்பை பன்மடங்கு உயர்த்தியது.
கமலா நேரு மிகப்பிரபலமானவர் என்பதால் நம் அனைவருக்கும் தெரிந்தவர்தான். ஆனால், பிரதமர் நேருவால் மாறிப்போன பழங்குடியினப் பெண் புத்தினியின் வரலாறு பலரும் அறியாத ஒன்று. சொல்லப்போனால் புத்னியின் வாழ்க்கை பெரிய சோகமாகும். இந்த உண்மைகள் வெளியுலகத்திற்கு அந்தளவுக்கு தெரியாதது ஒரு ஆச்சரியம்தான்!
தானியங்கள், திசைகள், இசைகள், நிலங்கள், காற்றுகள் என்று ஒவ்வொன்றையும் எப்படியெல்லாம் வகை வகையாக தமிழன் பிரித்தான் என்ற தகவல் பழந்தமிழனின் அறிவாற்றலையும் பண்பாட்டையும் தெளிவுப்படுத்தியது.
குரங்கை பற்றி சிந்தனை செய்த வே.கல்யாண்குமார் அதைப்பற்றி கவிதையாக எழுதியிருந்த விதம் மிகச்சிறப்பு. ' கூடி நீ..வாழுகிறாய்.. குடும்பமாய் விழுகிறாய்..குட்டியை சுமந்தபடி.. பாசத்தைக் காட்டுகிறாய்..தேடினும் கிடைக்காத குணத்தினால் உயர்ந்தவனே தேன் தமிழால் உன்னைப் பாடுதல் என் பயனே...' என்று குரங்கின் மீது ஒருவித ஈடுபாட்டுடன் பாசத்துடன் பாடியிருப்பது மனதைக் கவருகிறது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?