news Breaking News
clock

கரிய மாணிக்க பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

கரிய மாணிக்க பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்


வந்தவாசி, ஆக 29:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த உளுந்தை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கரிய மாணிக்க பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, நவக்கிரக ஹோமம், கணபதி பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது. பிறகு புனித நீர் கலசம் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தேறியது. பிறகு வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சார்யாக்கள் புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News