news Breaking News
clock

கண்ணா

கண்ணா

எழுதியவர் 

கீதா கண்ணன்

ஸ்ரீரங்கம்.

-------------------


பாதையில் செல்கையில்

பாவையர் சிரிப்பொலி..

பேச்சுடன் கலந்தே

காதில் விழுந்தது.


ரதையைத் தவிர

மற்றவரில் சிலர்..

'கண்ணனின் பிரியம்

யார் மேல் அதிகம்..?


'தன்னிடம் மட்டும்'..

'தன்னிடம் மட்டுமே'..

'தன்னிடம் மட்டும்தான்'..


கால் கடுக்க 

கால் மாற்றி நின்று

அவன் ஊதிய குழலிசை..

செய்த அலங்காரங்கள்..

நதிக்கரையோரம் 

காத்திருந்த பொழுதுகள்..

தனக்காக நிறுத்தி வைத்த

வேலையின் கணக்குகள்..


விதவித குரல்களில்

விவாதங்கள் பலதும்..


பாதையில் நடந்த

என்னை அழைத்தனர்..


கலக்கம் நிறைந்தது..

கவலை பிறந்தது..

'கணத்தினில் என்னைக்

காப்பாய் கண்ணா'

மனதினுள் வேண்டி 

அருகினில் சென்றேன்.


'எங்களில் யாருடன்

கண்ணனுக்கு ப்ரியம்

கூடுதலாய்' என

உடனே சொல்வாய்.."


'ராதையிடம்.."

சட்டென்று உடனே

யோசிக்காமல்

பட்டென்று பதிலை

எடுத்துரைத்தேன்


'அட மிகவும் சரியாய்

பதிலுரைத்தாய்..'


அடுத்த கணத்தில்

உயர்ந்தெழுந்தேன்

பூமியிலிருந்து

எதிர்பாராமல்


இனித்தே மகிழ்ந்ததில்

எகிறியது

இதயத் துடிப்பும்

அதிவிரைவாய்..


மரத்தின் பின்னால்

மறைவிடத்திருந்து

பேசிக் கொண்டே

தோன்றியவன்

இருகரத்தால் எனைத்

தூக்கிக் கொண்டான்

என்னுள் என்றும்

நிறைந்த கண்ணன்!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News