
ராமனின் அழகை வருணிக்கும் பொழுது கம்பர் அவனுடைய நிறத்தை மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்... என்பார்
அப்படிப்பட்ட ராமபிரானைப் பெண்கள் பார்க்கும் பொழுது அவன் அழகில் மயங்கி ஓர் அங்கத்தைப் பார்ப்பவர்கள் அந்த அங்கத்தை மட்டுமே பார்த்தார்களாம் அதனால் எந்தப் பெண்ணுமே ராமனின் முழு வடிவழகைப் பார்த்ததில்லை என்பது போல் இப்பாடல் அமைந்துள்ளது
தோள் கண்டார் தோளே கண்டார்
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியின் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்
இந்தப் பாடலை ஒட்டி கண்ணதாசன் ஒரு ஆண்மகன் தனக்கு விருப்பப்பட்டக் காதலியைப் பார்ப்பது பாடுவதுபோல் இப்பாடலை அமைத்துள்ளார்
தோள் கண்டேன் தோளே கண்டேன் என்ற பாடல்தான் அது அதில்
தேடி வந்த திங்கள்
திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி
சேர்ந்தெடுத்தேன் அள்ளி...
இப்படி வரிகள் வரும் திங்கள் என்பது நிலவைக் குறிப்பது இங்கு பெண்ணைக் குறிப்பதுபோல் பாடி இருக்கிறார் இன்னொரு பாடலிலும் திங்கள் என்பது பெண்ணாக ...திங்கள் என்பதற்குப் பெண் என்ற பொருள் உண்டா மேலும் செவ்வாயில் வெள்ளி என்பதுசிவந்த வாயையுடைய பெண்ணின் முத்துப் பற்கள் என்று அர்த்தம் கொள்ளலாம் அப்படி என்றால் வெள்ளி என்பதற்குப் பற்கள் என்று பொருள் அமையுமா
இல்லை இது வேறு பொருளைக் கொடுக்குமா... தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்......
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?