கடவுளிடம் கைப்பேசி !

கடவுளிடம் கைப்பேசி !


இறைவனிடம் என் கஷ்டங்களை நேரில் சொல்ல கடவுளின் கைபேசி எண்ணை தருமாறு வேண்டுதல் வைத்தேன் !


முதலில் ஒரு கைபேசியை வாங்கிக் கொடு என்றார் தரிசனத்தில் கடவுள்.... !


நல்ல கம்பெனி செல்ஃபோன் ஒன்றை கடவுளுக்கு வாங்கி கருவறையில் படைத்தேன் !


அவ்வளவுதான் ....!


நான் கடவுளின் என்னை தொடர்பு கொள்ளும் போதெல்லாம்....


நீங்கள் வரிசையில் இருக்கிறீர்கள்....!


நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் பிஸியாக உள்ளார்... !


நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்.... !

என்றே பதில் வந்தது...


அப்பொழுதுதான் உணர்ந்தேன் கடவுளுக்கும்

செல்ஃபோன் கிடைத்தால் மனிதனைப் போல் மாறிவிடுவார் என்று !

________________________

எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%