எதிர்காலம் ஆணா

எதிர்காலம் ஆணா



   " முதிர் கன்னி

     அந்தக் காலம்

     வீட்டுக்கு ஒரு

      முதிர் ஆண்

      இந்தக் காலம் .... "


       இந்தக் கால

       பெண்களுக்கு

       ஆண்கள் ஈடு

       கொடுக்க முடிவதில்லை..."


       திருமணம் ஆகாமல்

       வீட்டுக்கு ஒரு

       ஆண் கூண்டில்

       அடைக்கப் படுகிறார்கள்..."


       வேலை தேடும்

       படலம் ஒரு

       பகுதி என்றால்

       பெண் தேடும்

       படலம் மீதி

       பகுதி ..."


       பெண் பார்க்கும்

       படலம் என்பது

       மாறி ஆண்

       பார்க்கும் படலம்

       என்றாகி விட்டது .... "


        பெண் போடும்

        கட்டளைகள் 

        அதை விட பெண்ணின்

        தாய் போடும்

        கட்டளைகள்

        ஏராளம் ஏராளம் .... "


        இனி பிரம்மச்சாரிகள்

        கூட்டம் வழிந்து

        நிரம்பும் 

        ஆண் வர்க்கம்

        ஆதிக்கம் அழிந்து ..."


        பெண் வர்க்க

        வளர்ச்சி கரை

        புரண்டு ஓடுகிறது

        ஆண் பாவம்

         தொடங்கி விட்டது .... "

        

  - சீர்காழி. ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%