எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி

எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி



சென்னை: சென்னை மண்ணடியில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பும் நிகழ்வில் பங் கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் இது வரை 3,956 திருக்கோவில்களுக்கு குட முழுக்கு நடைபெற்றுள்ளதாகவும், 4,000 ஆவது குடமுழுக்காக வியாசர்பாடி ரவீஸ் வரர் கோவில் குடமுழுக்கு நடை பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சபரிமலைக்கு இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் பிஸ்கட்கள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந் தால் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்ற எச்.ராஜாவின் கருத்து குறித்து கேட்டபோது, முதலில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும் என்று அமைச் சர் கூறினார். குறிப்பாக சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியை தேர்ந்தெடுக்கச் சொல்லி, திமுக சார்பாக சாதாரண தொண் டரை வைத்து அவரை மண்ணைக் கவ்வ வைப்போம் என்று அவர் சவால் விடுத்தார். நாடு முழுவதும் பாஜகவினர், கிறிஸ்தவர் கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், தமி ழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்ப தாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%