news Breaking News
clock

உலக எழுத்தறிவு தினம் - 2025

உலக எழுத்தறிவு தினம் - 2025


ஒரு மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பதே எழுத்தறிவு. ஒவ்வொரு தனி மனிதனும் எழுத்தறிவு பெற்றிருப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. எழுத்துக்களைப் படிப்பது அறிவை வளர்க்க உதவும். எழுத்தும், அறிவும் ஒன்று சேர்கையில் தனித்து செயல்படுவதற்கான ஆற்றல் கிடைக்கும். அந்த ஆற்றலே ஆக்கப்பூர்வமான பல செயல்களுக்கு அடிப்படையாக அமையும்.


எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாத உலகை உருவாக்கவும் ஐ.நா. சபை அமைப்பின் அங்கமான யுனெஸ்கோ, 1965-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 'உலக எழுத்தறிவு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.


எழுத்தறிவு பெற்றவரால் மட்டுமே தனக்கான உரிமை, பாதுகாப்பு, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து செயல்பட முடியும். குறிப்பாக பெண்களுக்கு எழுத்தறிவும், கல்வியறிவும் அவசியமானவை. எழுத்தறிவின்மையை போக்குவதற்காக அரசும், தொண்டு நிறுவனங்களும் பல்வேறு திட்டங்களின் மூலம் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சமூகத்தின் மேம்பாட்டுக்கு அஸ்திவாரமான எழுத்தறிவை, அனைவரும் பெறுவதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை செய்வோம். 


எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.


தொகுப்பு: பா. சீனிவாசன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News