மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் 17 வது இடத்தை வங்கதேசம் பெற்றது.
14-வது ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர், சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இதில் பதினேழாவது இடத்திற்கான ஆட்டத்தில் நேற்று வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. மதுரையில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை 17வது இடத்தில நிறைவு செய்தது. இந்த அணி சார்பில் அமிருல் இஸ்லாம் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
கொரியா 19 வது இடம்:
அவர் 15, 50 மற்றும் 57வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றினார். ஹோசிஃபா ஹொசைன் (27 ஆவது நிமிடம்) ரகிபுல்ஹாசன் (35 வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். எகிப்து அணி 3-2 என்று கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி 21 வது இடத்தை பிடித்தது. கொரியா 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 19-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது.
நமீபியா 4-2 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி 24 அணிகள் கலந்து கொண்டுள்ள தொடரில் 23-வது இடம் பிடித்தது. 17 வது இடம்பிடித்த வங்கதேச அணியினருக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் பிரவீன் குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், போலீஸ் கமிஷனர் லோகநாதன் பரிசுகளை வழங்கினார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?