ஈமச்சடங்கு நிதிக்கு ரூ.2000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது

ஈமச்சடங்கு நிதிக்கு ரூ.2000 லஞ்சம்  வாங்கிய பெண் தாசில்தார் கைது


 ஈமச்சடங்குகள் செய்வதற்காக அரசு வழங்கும் ரூ.25 ஆயிரத்தில் ரூ.2,000ஐ லஞ்சமாக கேட்ட பெண் வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.

 நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மலர், கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணாக இயற்கை மரணம் அடைந்தார். பெருமாள் உழவர் பாதுகாப்பு கூட்டுறவு சங்கம் உறுப்பினராக உள்ளார். சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால், அவர்களின் ஈமச்சடங்குகளை செய்வதற்காக அரசு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்தத் தொகையை பெறுவதற்காக மலரின் மகன் சேகர், நாட்றம்பள்ளி சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரான வள்ளியம்மாவிடம் மனு அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட அவர் சேகரிடம் ரூ.3,000 லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. பிறகு பேரம் பேசி ரூ.2000 லஞ்சமாக குறைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் சேகர் புகார் அளித்தார். 

  அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜு, ஆய்வாளர் கவுரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் இந்த புகாரை விசாரிக்க தொடங்கினர். அப்போது அவர்கள் சேகரிடம் ரசாயனம் தடவிய பணத்தை வட்டாட்சியர் வள்ளியம்மாளிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி வள்ளியம்மாள் பணத்தை பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வள்ளியம்மாளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது திடீரென தனி வட்டாட்சியருக்கு மயக்கம் ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 அங்குசெய்தியாளர்கள் சென்ற போது, யாரும்உள்ளே வரக்கூடாது எனவிஜிலன்ஸ் போலீஸ் ஷாலினி பூட்டினார்.இதற்கு டாக்டர்கள் கண்டனம் தெரிவித்தனர்.மருத்துவமனை கதவை பூட்டுவதற்கு நீங்கள் யார்? என்று கேட்ட பின்னர் கதவுதிறக்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%