
மதுரை, இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் கனகலட்சுமி தலைமை வகிக்க, உதவித் தலைமையாசிரியர் லசபதி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். கபடி, கோகோ மற்றும் தனிநபர் விளையாட்டுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடையைச் சிறப்பு விருந்தினர் பெத்தானியபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மதி வெங்கடேஷ் நன்கொடையாக வழங்கினார். விழாவை பாலா, வசந்த், விஜய் ஆனந்த், விஷ்வா ஏற்பாடு செய்தனர். உடற்கல்வி ஆசிரியர் முத்துராசா நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%