பூண்டின் பிரமாதமான மருத்துவக் குணங்கள்

பூண்டின் பிரமாதமான மருத்துவக் குணங்கள்


நம் சமையலறை அலமா‌ரி‌யி‌ல் உள்ள ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு எப்போதும் மு‌ன்னு‌ரிமை உண்டு.


பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.


பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.


பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். பூண்டை உணவில் சேர்த்தால் நல்லது. ஆனால் அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன. அதனால், அப்படியே கடித்து விழுங்குவது மிகவும் நல்லது.


தொண்டை கரகரப்பாக இருருந்தால் நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விட்டால் உடனே சரியாகும். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால் சர்க்கரை அளவை சீராக்குகிறது. இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து விடும்.


பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும�




: பாட்டில் தண்ணீர் அவ்வளவு சுகாதாரமானது அல்ல! 

 



பாட்டிலில் அடைக்கப்படும் தண்ணீர் குழாயில் வரும் தண்ணீரை விட பாதுகாப்பானது அல்ல,சுகாதாரமானது அல்ல என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இதனை கண்டுபிடித்துள்ளனர். இன்று குழாய் நீர் ஏதோ பாதுகாப்பற்றது என்பது நிரூபிக்க படாத உண்மையாகவே மாறி ஒவ்வொரு வீட்டிலும் குடிநீரை வெளியிலிருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர், அதுவும் பெரிய பிளாஸ்டிக் கேன்களிலேயே அது இருக்கிறது. தொடர்ந்து அதையே குடிட்த்தும் வருகிறோம்.


மறாக குழாய்த் தண்ணீரில் உள்ள சிறிய அளவிலான குளோரின், பாக்டீரியாவிலிருந்தும் நோய் உருவாக்க கூறுகளிடமிருந்தும் நம்மை காக்கிறது. மாறாக மினரல் வாட்டர் தயாரிப்பாளர்கள் ஒரு முறை அதனை சோதனை செய்து பாட்டிலில் அடைத்து விட்டால் அவ்வளவுதான் மாதக்கணக்கில் அந்த நீர் அப்படியே உள்ளது.


மேலும் பாட்டில் தண்ணீரில் குளோரின் போன்ற நோய்த் தடுப்பு சக்திகள் முற்றிலும் இல்லவேயில்லை. இதைத்தான் சுத்தமான தண்ணீர் என்று நம்மை அந்த நிறுவனங்கள் நம்ப வைக்கின்றன. மேலும் மிஅரல் என்று பல மூலக்கூறுகளை லேபிளில் பட்டியலிடுகின்றன. அவையெல்லாம் பிரிசர்வேட்டிவ்களே.


மேலும் குழாய் நீரை சுட வைத்து குடிநீராக பயன்படுத்தலாம் ஆனால் மினரல் நீரை நாம் நேரடியாக பயன்படுத்துகிறோம் ஒரு முறை அதன் சீலிடப்பட்ட மூடியை திறந்து பயன்படுத்தத் தொடங்கினால் அதன் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லை.


திறந்த உடனேயே அதனை நாம் பயன்படுத்திவிடவேண்டும். ஆனால் நாம் அப்படியா செய்கிறோம். இரண்டு நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் கேன் வாங்குகிறோம்.


ஆகவே குழாய் தண்ணீரே பாட்டில் குடிநீரை விட சுகாதாரமானது என்கிறார்கள் பிரிட்டன் ஆய்வாளர்கள்.



 

 புதினா கீரையின் அற்புதங்கள்! 

 



புதினா ) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.


புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.


அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.


ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.


புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.


மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.


புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். 



பீட்ரூட் ஒரு சர்வ நிவாரணி! 

 



பீட்ரூட் காய், கீரை, ஜூஸ் என பீட்ரூடின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை. பீட்ரூட் என்ற ஒற்றை உணவுப்பொருள் உடலின் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வல்லது ஆகும்.


பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.


பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.


பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.


கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.


பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.


தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.


புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.


பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.


புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம் 

 



தண்ணியடிப்போர்களே! தினமும் அடிப்பதை ஒரு தொழிலாகக் கொண்டவர்களுக்காகவே ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பிரேக் கொடுங்களேன், ஆரோக்கியம் சீரடைவதோடு, குடித்ததால் ஏற்படும் சேதமும் சீரடைகிறதாம்!


மது அருந்துவதால் ஆய பயன் என்ன? போதையைத் தவிர அதனால் ஒன்றுமில்லை. அதில் உள்ள கலோரிகள் வெற்றுக் கலோரிகள், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. மாறாக அந்தக் கலோரியை எரிக்க 2 மணிநேரம் பயிற்சி தேவைப்படுகிறதாம்!


தண்ணியடித்து விட்டு பயிற்சி செய்வது தமாஷாக இருக்கும்! ஆனால் அதுவல்ல விஷயம், நாம் தண்ணியுடன் சேர்த்து சிக்கன், மட்டன், பீஃப் என்றெல்லாம் உள்ளே தள்ளும் நபர்களைப் பார்க்கிறோம், இதெல்லாம் அதிக கலோரிகள், ஏற்கனவே மதுவினால் கலோரி அதிகரிப்பு இந் சைட் டிஷ்களால் கலோரி அதிகரிப்பு இதனால் என்ன உபரி கலோரியை எரிக்க முடியாமல் போகும்போது கடும் 'ஹேங் ஓவர்' வருகிறது.


எனவே ஒரு குறுகிய கால பிரேக் கொடுத்தால் கூட போதும் அதாவது ஒரு இரண்டு வாரம் 33 வாரம் நிறுத்துவதால் உடலில் நச்சுக்கள் வெளியேறுகிறது.


உடலில் உள்ள நீர் சத்தையெல்லாம் உரிஞ்சுவதுதான் ஆல்கஹால் செய்யும் வேலை, இதனால்தான் நீண்ட நாளைய குடிகாரர்களின் கன்னங்கள், உதடுகள் மற்றும் உடல் சருமமே தடித்தனமாக கர்ண கொடூரமாக மாறிவிடுகிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். மது அருந்துவதை நிறுத்தினால் உடலின் நீர்ச் சத்து பாதுகாக்கப்படுகிறது.


அதிகமாக தண்ணி கலந்தே மது அருந்துகிறோம் என்று கூறுபவர்களின் குரகள் கேட்கின்றன. அதனால் எந்த வித பயனும் இல்லை. சூடான தோசைக்கல்லில் தண்ணீரை டௌpத்தால் என்ன ஆகும் அது ஆவியாகும் அவ்வளவே எவ்வளவு தண்ணி ஊத்தி அடித்தாலும் ஆல்கஹால் சூடான தோசைக்கல் போல்தான்.


Thanks and regards 

A s Govinda rajan

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%