இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப் பள்ளியில் இன்று (06-11-2025) தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் கனகலட்சுமி தலைமை வகிக்க, உதவித் தலைமை ஆசிரியர் இலசபதி முன்னிலை வகித்தார். மாணவி சக்தி பிரியா வரவேற்றார். தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் காந்திதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 'தமிழ் இலக்கியங்களில் மனிதம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியர் காந்திதுரை நூல்களைப் பரிசாக வழங்கினார். விழாவினை 'நல்லாசிரியர்' மகேந்திர பாபு தொகுத்து வழங்கினார். ஒன்பதாம் வகுப்பு மாணவி சௌம்யா நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?