இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து ஒரு கோடி பேர் உயிரை காப்பாற்றினேன்: அதிபர் டிரம்ப்

இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து ஒரு கோடி பேர் உயிரை காப்பாற்றினேன்: அதிபர் டிரம்ப்


இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து இதுவரை 1 கோடி பேர் உயிரை காப்பாற்றி உள்ளேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.


நான் இன்னும் தீர்க்காத ஒரே போர் ரஷ்யா–உக்ரைன் போர் மட்டும் தான் என்றும் கூறினார்.


அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–


ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையே பெரும் பகை உள்ளது. நான் 8 போர்களைத் தீர்த்து வைத்திருக்கிறேன். நான் இன்னும் தீர்க்காத ஒரே போர் ரஷ்யா–உக்ரைன் போர் மட்டும்தான்.


முன்னதாக பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்படவிருந்த ஒரு அணு ஆயுதப் போரை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். ஒரு கோடி பேரின் உயிரை காப்பாற்றினேன். இல்லையெனில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார். அப்போது 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான நிலைமை சீரடைந்து வருகிறது. அது ஏற்கெனவே நல்ல நிலையில் இருப்பதாக நான் நம்புகிறேன்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%