ஆர்.எஸ்.எஸ்.குரலாக பழனிசாமி மாறிவிட்டார் , இந்திய கம்யூ.குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.எஸ்.குரலாக பழனிசாமி மாறிவிட்டார் , இந்திய கம்யூ.குற்றச்சாட்டு


சென்னை, அக். 18-

பழனிசாமியின் குரல் ஆர்எஸ்எஸ் குரலாக மாறி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார்.

இந்திய கம்யூ. தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று வீரபாண்டியன் அளித்த பேட்டி- 

இலங்கை பிரதமர் இந்தியா வந்துள்ள சூழலை பயன்படுத்தி, கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழக ஆளுநர் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கிறார். அவர் தனது உயரம் தெரியாமல் அடிக்கடி தமிழக சட்டப்பேரவையில் ஏறி அமர முயற்சிக்கிறார். தமிழக ஆளுநர் குறித்து சட்டப்பேரவை நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோமா, இல்லையா என்பது குறித்து பிரதமர் அலுவலகம் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கரூர் சம்பவத்துக்கு கூட்டம் நடத்தியவர்களே தார்மீக பொறுப்பேற்க வேண்டும். பழனிசாமியின் குரல் எம்ஜிஆர் குரலாக, ஜெயலலிதா குரலாக இல்லாமல் ஆர்எஸ்எஸ் குரலாக மாறி வருகிறது. பாஜகவுடன் சேர்வதால் அதிமுக கரைவதற்கான சிதைந்து போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பாஜகவுடன் அதிமுக சேர்ந்தால் எங்கள் கூட்டணி மட்டும் அல்ல தமிழக மக்களே தோற்கடிக்க காத்திருக்கிறார்கள்.

 இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%