ஆண்டாள் பிரதிஷ்டை, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் திருக்கல்யாணம்........

திருவண்ணாமலை மாவட்டம் ஜூலை 14.07.2025 கீழ்பென்னாத்தூர் லால் பகதூர் தெரு தெலுங்கு அக்ரஹாரம் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் நூதன ஆண்டாள் பிரதிஷ்டை வைபவம் அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணமும் நடைபெற்றது. சிறப்பு முதன்மை அர்ச்சகர்கள் நாராயணன் பட்டாச்சாரியார் அவர்கள், ரமேஷ் பட்டாச்சாரியார், மணி பட்டாச்சாரியார் உதவி அர்ச்சகர் சம்பத் பட்டாச்சாரியார் ஆகிய அவர்களால் அபிஷேகங்கள், அலங்காரமும், திருமஞ்சனமும் மகாதீபாரதனையும், சங்கல்பம் செய்து, யாகங்கள் வளர்த்து திருக்கல்யாணம் ஸ்ரீ ஆண்டாள் பிரதிஷ்டையும் செய்து வைத்தனர் உபயதாரர் ஸ்ரீராம் வனஜா( லண்டன்) ஸ்ரீதேவி பூதேவி வேண்டுதலின்படி குழந்தை பாக்கியம், வேலையும் கிடைத்தது. திருக்கல்யாணத்தை நடத்தினார். திருக்கல்யாணத்தை உடனிருந்து நடத்தி வைத்தவர் சக்திவேல் மனைவி உமா மகேஸ்வரி கீழ்பென்னாத்தூர் அவர்களால் வெகு சிறப்பாக பிரதிஷ்டையும், ஸ்ரீதேவி பூதேவி திருக்கல்யாணமும் நடைபெற்றது. பிரசாதம், நெய்வேத்தியத்துடன், தீபாராதானையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீதேவி பூதேவியை வணங்கி வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?