ஆடி கடைசி வெள்ளி மயான திரளை பூஜை

ஆடி கடைசி வெள்ளி மயான திரளை பூஜை



தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ மலையாளத்து சுடலை மகாராஜா திருக்கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு மயான திரளை பூஜை நடைபெற்றது. 

நள்ளிரவு 2 மணிக்கு சிறப்பு பூஜையுடன் சாமக் கொடை ஆரம்பமானது.

ஸ்ரீ சங்கர் சுவாமி மயான வேட்டைக்குச் சென்று பேய் விரட்டுதல்,பில்லி, சூனியம்,ஏவல் போன்றவை விலக பரிவார தெய்வங்களுக்கு திரளை கொடுத்து பரிகாரம் கழித்தல் நடைபெற்றது.

இதில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் தீராத நோய் உள்ளவர்கள் கலந்து கொண்டு சுடலை மகாராஜாவை வேண்டி பிரார்த்தனை செய்தனர். மாயன வேட்டைக்கு சென்று வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%