ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சாகசம்
Aug 08 2025
15

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் அலைசறுக்கு போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் பலர் பங்கேற்று அலைசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு சாகசம் செய்தனர். ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில், தாய்லாந்து, பங்களாதேஷ், சீனா, இந்தோனேசியா, இந்தியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், கொரியா, மலேசியா, சிங்கப்பூர், திபெத், இலங்கை, குவைத், உஸ்பெக்கிஸ்தான் உள்ளிட்ட 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 102 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய சர்ஃபிங் கூட்டமைப்பு, ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு, தமிழக விளையாட்டு துறை அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. ஆக.12-ம் தேதி வரை மாமல்லபுரம் கடற்கரையில் தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இதில், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்று அலைசறுக்கு போட்டியில் ஈடுபட்டனர்.மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் அலைசறுக்கு போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?