சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து போனவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அவரை கட்சி யின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து எடப்பாடி பழனி சாமி நீக்கினார். இதையடுத்து தில்லி சென்ற செங்கோட்டையன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை ஒத்தி வைத்துவிட்டு செவ்வாய்க்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அதிமுக கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றுள்ளனர். தில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரி வித்தார். இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய நபர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?