அந்யோன்யம் !

அந்யோன்யம் !


" தாத்தா ..."


" வாடா பேராண்டி !" 


" தாத்தா! இன்னிக்கு கார்த்தாலே தீபாவளிக்காக நம்மாத்துல பாதுஷா வும் தேன்குழலும் பண்ணியிருக்கா. டேஸ்ட் பண்ணினேளா?" 


" டேய் கண்ணா ! ஒரு பல்லு இல்ல. இந்த பொக்க வாயை வெச்சிண்டு நான் எப்படிடா சாப்பிடுவேன் !" 


" ,ஓ...சாரி தாத்தா !" 


அதேசமயம் அங்கு வந்த ஜானகி பாட்டி, " என்ன பேரன்கிட்ட ஏதோ கம்ப்ளயிண்ட் பண்ணிண்டிருக்கேள்?" 


" ஆத்துல பண்ணின பட்சணத்த டேஸ்ட் பண்ணிணீங்களான்னு கேட்டான் . நான் இல்லேன்னு சொன்னேன்." 


" அது சரி. மத்யானம் டபராவுல போட்டுக்கொடுத்தேனே. நியாபகம் இல்லையா?" 


" எது ?" 


" பாதுஷாவையும் தேன்குழலையும் நன்னா மிக்ஸியில பொடியாக்கி டபரா ஃபுல்லா போட்டுக் கொடு த்தேன். நன்னா முழுங் கிட்டு இப்போ இல்லேன்னு லொட்டு சொல்றேள் !" 


" ஓ...அதுவா...ஒரு அசட்டுத் தித்தி ப்போட உப்பாவும் இருந்ததே அதைச் சொல்றியா? அது தீபாவளி சூர்ண ம்னு நினைச்சேன !" 


" நினைப்பேள். கார்த்தாலஅஞ்சுமணி க்கு நெல்லிக்கா சைஸ்ல லேகியம் முழுங்கியாச்சு. அப்புறம் சூர்ணம் வேற கேக்கறதா?" 


" கோச்சுக்காதடி...ஹூம் ! அறுபது வயசு வரைக்கும் முப்பத்திரெண்டு பல்லும் நன்னா ஸ்ட்ராங்கா இருந் தது. எல்லாத்தையும் நன்னா கடிச்சு சாப்பிட முடிஞ்சுது. ஏன்..நீ செஞ்சு கொடுத்த மைசூர்பாக்கக் கூட ஈஸியா கடிச்சு முழுங்குவேன்...இப்போ வயசு 75 வயசாகறது . பல்லெல்லாம் கொட் 

டிப்போச்சு !" 


" நான் செஞ்ச மைசூர்பாக்கு அப்படி கல்லா வாயிருந்தது ?" 


" ஒரு பேச்சுக்கு சொன்னேண்டி . நீ உடனே மூஞ்சியத் தூக்கி வச்சுக் காதே!" என்றவர்," அது சரி ஜானகி ! நீ பட்சணம் சாப்பிட்டியோ ?" 


" இல்லேன்னா !" 


" ஏண்டி..உனக்கென்ன கேடு ! முப்பத்திரெண்டு பல்லும் இன்னும் கொட்டாம இருக்கு. நன்னா சாப்பி டலாமோல்லியோ?"


" உங்களால நன்னா ரசிச்சு சாப்பிட முடியாதபோது நான் மட்டும் எப்படி ன்னா சாப்டறது ?" 


உடனே நெகிழ்ந்து போனவர் கண்கள் 

பனிக்க பாட்டியின் கை பற்றினார்.

" ஜானு...நீ ஒசந்தவள்டி ! ஒனக்கு நான் புருஷனா....தப்பு தப்பு ! நீ எனக்கு பெண்டாட்டியா வர நான் கொடுத்து வந்திருக்கணும். ஏழேழு ஜென்மத்துக்கும் நாம தம்பதியா இருக்கணும்னு பகவான வேண்டிக்

கிறேன்." 


" சரி சரி கைய விடுங்கோ !" 


தாத்தா விடாமல் இருக்க பாட்டிக்கு கோபம் வந்தது. " என்ன பால்யம் திரும்பி வந்துடுத்துன்னு நினை ப்பா ?" 


தாத்தா மெளனமாய் கண்மூடி லயித்திருக்க ஜானகி பாட்டி வெடு க்கென்று தன் கையை இழுத்து உதறியவாறு நடையைக் கட்டினாள்.


தாத்தா, பாட்டி இந்த வயதிலும் அப்படி அந்யோன்யமாக இருப்பதைக் கண்டு வாய் பிளந்து நின்றான் பேரன் கண்ணன்.


---வி.கே.லக்ஷ்மிநாராயணன்


                

அந்யோன்யம் ' என்கிற 

சிறுகதை அனுப்பி

யுள்ளேன் பரிசீலனைக்காக

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%