அதிக நன்கொடை அள்ளித்தந்த அமெரிக்க பெண்மணி; அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி தாராளம்

அதிக நன்கொடை அள்ளித்தந்த அமெரிக்க பெண்மணி; அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி தாராளம்


 

வாஷிங்டன்: அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட், 2025ம் ஆண்டில் 7.1 பில்லியன் டாலர் நன்கொடை வழங்கி உள்ளார். ஒரு ஆண்டில் அதிகமாக வழங்கப்பட்ட நன்கொடை இதுவே ஆகும்.


உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நன்கொடையாளரான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட். இருவரும் கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்தின் போது 35 பில்லியன் அமெரிக்க டாலர் ஜெப் பெஜோஸ் வழங்கினார்.



( ஒரு பில்லியன் என்பது 100 கோடிக் சமம். இதனால் மெக்கன்சிக்கு 3500 கோடி அமெரிக்க டாலர் கிடைத்தது.)


மெக்கன்சி ஸ்காட், கடந்த சில ஆண்டுகளாக நன்கொடை வழங்கி வருகிறார். சமூக ஒற்றுமை , ஓரின சேர்க்கையாளர்கள் உரிமை, பொது சுகாதாரம் பருவநிலை மாற்றம் போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கி வந்தார்.


இந்நிலையில், இந்தாண்டு பல்கலை, சுற்றுச்சுழல் சார்ந்த தொண்டு நிறுவனம், சமநிலைக்காக போராடும் அமைப்புகள் என 186 அமைப்புகளுக்கு 7,166,000,000(7.1 பில்லியன்) அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கி உள்ளார். (இந்திய மதிப்பில் 64,191 கோடி ரூபாய்) நன்கொடை வழங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு அவரின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ஒரே ஆண்டில் ஒருவர் வழங்கிய அதிகளவு நன்கொடை இதுவாகும்.


இந்தாண்டு ஹோவர்டு பல்கலைக்கு 80 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் 716 கோடி ரூபாய்) நன்கொடை வழங்கியுள்ளார். குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் வெள்ளை இனத்தை சாராத மாணவர்களின் கல்விக்காக போராடும் தொண்டு நிறுவனத்துக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்( 376 கோடி ரூபாய்) நன்கொடை வழங்கி உள்ளார்.


போர்ப்ஸ் நாளிதழின் அறிக்கைப்படி மெக்கன்சி ஸ்காட்டின் சொத்து மதிப்பு 29.9 பில்லியன் டாலர் ஆகும்.( இந்திய மதிப்பில் 2,59,775 கோடி ரூபாய்) ஆகும்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%