அண்ணா சொல்வதை போல...” - தவெக செயலியை அறிமுகம் செய்த விஜய் பேச்சு

அண்ணா சொல்வதை போல...” - தவெக செயலியை அறிமுகம் செய்த விஜய் பேச்சு

தவெக சார்​பில் உறுப்​பினர் சேர்க்கை செயலியை நேற்று கட்சியின் தலைவர் விஜய் அறி​முகம் செய்தார்.

சென்னை: தமிழகத்​தில் கடந்த 1967, 1977-ம் ஆண்டு தேர்​தலை போல 2026 சட்​டப்​பேரவை தேர்​தலும் அமை​யும் என தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார். தவெக சார்​பில் ‘மை டிவி​கே’ எனும் உறுப்​பினர் சேர்க்கை செயலி அறி​முக விழா கட்சி தலைமை அலுவலகத்​தில் நேற்று நடந்​தது. இதில் செயலியை விஜய் அறி​முகம் செய்து வைத்​தார்.


தொடர்ந்​து, ‘ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு வெற்​றிப் பேரணி​யில் தமிழ்​நாடு’ என்ற பிரச்​சா​ரத்தை தொடங்கி வைத்​தார். அப்​போது, ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 தலை​முறை​யினருக்கு உறுப்​பினர் அடை​யாள அட்​டையை விஜய் வழங்​கி​னார்.


இதையடுத்து அவர் பேசி​ய​தாவது: தமிழக அரசி​யலில் 1967, 1977-ம் ஆண்டு தேர்​தல்​களை போல, 2026 தேர்​தலும் அமைய போகிறது. அந்த இரண்டு மாபெரும் தேர்​தல்​களி​லும், ஏற்​கெனவே தொடர்​ச்சி​யாக வெற்​றி பெற்று வந்​தவர்​களின் அதி​கார பலம், அசுர பலம் என எல்​லா​வற்​றை​யும் எதிர்த்​து​தான் புதி​தாக வந்​தவர்​கள் வெற்றி கண்​டார்​கள்.


ஊருக்கு ஊர், வீதிக்கு விதி, வீட்​டுக்கு வீடு என மக்​களை நேரடி​யாக சந்​தித்​த​தால் மட்​டுமே வெற்றி பெற்​றிருக்​கிறார்​கள். அண்ணா சொல்​வதை போல, மக்​களிடம் செல், மக்​களிடம் இருந்து கற்​றுக் கொள், மக்​களு​டன் வாழ், மக்​களுடன் சேர்ந்து திட்​ட​மிடு.


இதை சரி​யாக செய்​தாலே போதும், வெற்​றிப் பேரணி​யில் தமிழ்​நாடு என்ற பிரச்​சா​ரத்​தில் அனைத்து குடும்​பங்​களை​யும் ஒன்​றிணைத்​து, உறுப்​பினர்​களாக சேர்த்து நம்​மால் நிச்​ச​யம் வெற்றி பெற முடி​யும். அதனால், தான் ‘மைடிவி​கே’ என்ற செயலி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதைத்​தொடர்ந்து மதுரை மாநாடு, மக்​கள் சந்​திப்​பு, சுற்​றுப் பயணம் என தொடர்ச்​சி​யாக மக்​களோடு மக்​களாகதான் இருக்க போகிறோம்​. இவ்​வாறு பேசி​னார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%