news Breaking News
clock

அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை: ரஷ்யா உறுதி

அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை: ரஷ்யா உறுதி


வாஷிங்டன்:


அமெரிக்கா மீண்டும் சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ள போதிலும், அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை என ரஷ்யா மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளது.


இது குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: சர்வதேச அணுசக்தி சோதனை தடைகளின் கீழ், ரஷ்யா தனது உறுதிமொழிகளை கடைபிடிக்கிறது. அணுஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை. சோதனை நடத்துமாறு அதிபர் புடின் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.


அணு ஆயுத சோதனைகள் மீதான நீண்ட கால தடைக்கு ரஷ்யா உறுதிபூண்டுள்ளது. மூன்று தசாப்த கால இடைநிறுத்தத்தை அமெரிக்கா மீறினால், அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம். அமெரிக்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இன்றைய உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பிற்கு அணுசக்தி சமநிலை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.


அமெரிக்க அணு ஆயுதங்களை பரிசோதிக்க தொடங்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். அவர், ''வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன.


ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது'' என கூறியிருந்தார். தற்போது, அணு ஆயுத சோனையை மீண்டும் தொடங்குமாறு டிரம்பின் உத்தரவுக்கு ரஷ்யா பதில் அளித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News