40வது பட்டமளிப்பு விழா பாரதியார் பல்கலைக்கழகத்தில் 92,287 மாணவர்களுக்கு பட்டம்
Feb 19 2026
32
கோவை, பிப். –
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் 40வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர் உஷா கீர்த்திலால் மேத்தா பேரவை அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.
விழாவில், பல்கலைக்கழக துணை வேந்தர் குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளருமான பி.சங்கர், சிறப்பு விருந்தினராக மும்பையில் அமைந்துள்ள ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தர் காமாட்சி முதலி, பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ராஜவேல், தேர்வாணையாளர் கே.விஜயராணி, துணைவேந்தர் குழு உறுப்பினர் ஆர்.துர்கா சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பல்கலைக்கழக வளர்ச்சி, புதிய கல்வித் திட்டங்கள், தொழில்துறை இணைப்புகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டில் பல புதிய கல்வித் திட்டங்கள் தொடங்கப்பட்டதுடன், ஆராய்ச்சி மற்றும் புதுமை முயற்சிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
நிதி ஆயோக் மற்றும் ஆயுஸ் அறிக்கைகளின் அடிப்படையில் உயர்கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தேசிய சராசரியை விட தமிழகத்தின் கல்வி வளர்ச்சி உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த ஆண்டில் மொத்தம் 92,287 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 1,271 பேர் நேரில் பங்கேற்று பட்டம் பெற்றனர். மேலும் 90,016 பேர் வராமல் பட்டம் பெற்றனர். மொத்தம் 1,110 முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் 159 மாணவர்கள் தங்கப்பதக்கங்கள் பெற்றனர்.
விழாவில் சிண்டிகேட் உறுப்பினர்கள், செனட் உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?