200 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை : ஐ.நா. அறிக்கை
Aug 31 2025
16

நியூயார்க்,ஆக. 28 -
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இன்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என ஐ.நா அவை தெரிவித்துள்ளது. மேலும் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான இலக்கை எட்டும் பணி மிகவும் தொய் வடைந்துள்ளது என எச்சரித்துள்ளது. ஐ.நா.வின் சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை யில், உலகளவில் நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆறுகள், குளங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற வற்றில் இருந்து எடுக்கப்படும் நீரை நேரடியாக சுத்திகரிக்காமல் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளன. உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப் ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டு ஆய்வறிக்கை தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மை சேவைகளில் நிலவும் பற்றாக்குறை காரணமாக, கோடிக்கணக்கான மக்கள் நோய்த்தொற்று அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது. 2015 லிருந்து 96.1 கோடி பேர் சுத்தமான குடிநீரைப் பெறத் துவங்கியுள்ளனர். இதன் மூலம் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது 68 சத வீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரித்துள் ளது. கடந்த ஆண்டு சுத்தமான குடிநீர் கிடைக்காத 210 கோடி மக்களில் சுமார் 10.6 கோடி மக்கள் ஆறுகள், குளங்கள் ஆகியவற்றில் இருந்து நேரடியாக சுத்திகரிக்கப்படாத தண்ணீ ரைப் பயன்படுத்தியுள்ளனர். எனினும் கடந்த பத்தாண்டுகளில் இந்த அளவுகளில் 6.1 கோடி பேர் குறைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. எனினும் அதிகரித்துவரும் போர்கள், வன்முறைகள், பொருளாதாரத் தடைகள், பஞ்சம் உள்ளிட்ட காரணங்களால் 2030க்குள் சுத்தமான குடிநீர் உலகில் உள்ள அனை வருக்கும் கிடைக்கச் செய்வதற்கான இலக்கை உலக நாடுகள் எட்டுவது சாத்தியமற்றதாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த இலக்கை அடையக்கூடிய காலஎல்லை கடந்து சென்று விட்டது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?