111 அறைகள், குறைந்த வாடகை: கோவை ‘சிட்கோ’ புதிய தொழிலாளர் விடுதிக்கு வரவேற்பு

111 அறைகள், குறைந்த வாடகை: கோவை ‘சிட்கோ’ புதிய தொழிலாளர் விடுதிக்கு வரவேற்பு

கோவை:

தமிழக அரசு சார்பில் கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தொழிலாளர் தங்கும் விடுதிக்கு தொழில் நிறுவனத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறைகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.


கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது ‘சிட்கோ’ தொழிற்பேட்டை வளாகம். தமிழக அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயன்பெற உதவும் வகையில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி திட்டத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சமீபத்தில் இந்த விடுதி திறக்கப்பட்டது.


மொத்தம் ரூ.23.05 கோடி செலவில் 1.49 ஏக்கர் நிலத்தில் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் 66 அறைகள், ‘பி’ பிரிவில் 45 அறைகள் என மொத்தம் 111 அறைகள் உள்ளன. 528 தொழிலாளர்கள் தங்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியில், தொழிலாளர்கள் குடும்பத் துடன் தங்கும் அறைகளும் உள்ளன. 4 பேர் தங்குவதற்கு ரூ.8,000, 6 பேர் தங்கும் அறைக்கு ரூ.12,000 மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர்கள் மட்டும் தங்கும் வகையிலான அறைகளில் எட்டு பேர் தங்க ரூ.12,000 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மின்தூக்கிகள், விளையாட்டுத் திடல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்ட நிலையில் அறைகளை முன்பதிவு செய்யும் பணிகளை தொழில்துறையினர் தொடங்கியு ள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%