news Breaking News
clock

வேலூரில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலூரில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.15 (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர், காட்பாடி விஐடி. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு. 12-ஆம்வகுப்பு. தொழிற்பயிற்சி, பட்டப்படிப்பு. பட்டயப்படிப்பு. முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, செவிலியர். பார்மஸி, பொறியியல் போன்ற பல்வேறு கல்வித்தகுதியுடைய வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News