வேண்டுதல்

வேண்டுதல்


அம்மாவிற்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்து, ஒரு மாதத்தில் இறந்து விட்டது. அவரின் அக்காவிற்கும் 2-3 பிள்ளைகள் பிறந்து பின் இறக்க , அடுத்த பிரசவத்தில் பிறப்பது ஆணாக இருந்தால் குருவாயூரப்பனுக்கு " துலாபாரம்" கொடுப்பதாக வேண்டினார்.


     அதே போல் அம்மாவும் தன் பிரசவத்தில் அப்படிச் செய்ய , கூட்டுக்குடும்பத்தில் அனுமதி பெறுவது சிரமம் என்பதால் , ஒரு எளிமையான வேண்டுதலை அதே "குருவாயூரப்பன்" மீது வைத்தார்.


      பிறக்கும் குழந்தை ஆணாக இருந்து உயிரோடிருந்தால் அவனுக்கு, "கண்ணன்" எனப் பெயரிட்டு தான் உயிருள்ளவரை அழைப்பதாக வேண்டிக்கொண்டார்.


     பிரார்த்தனையின் பலனாக பிறந்த என்னைத் தன் உயிர் உள்ள வரை , அவர் கண்ணன் என்றே அழைத்தார். மற்றவருக்குத்தான் பதிவில் உள்ள பெயர்.


     " காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா" என்ற நடிகர் "ஸ்ரீகாந்த் " படத்தில் இடம் பெற்ற பாடல் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும்.


    இப்போதும் அப்பாடல் கேட்டால் , "அம்மாவின் நினைவு" என்னுள் வந்து போகும். 


" கண்ணா" என்றழைக்க அந்த அம்மா தான் இன்று இல்லை, மறைந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன.


     என் 48வது வயதில் அம்மாவின் சார்பில், குருவாயூரப்பனை நேரில் தரிசித்தேன், ஒரு முறை கூட அவரைப் பார்த்திராத அம்மாவிற்காக....



ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%