வெற்றுக்காகிதமும் பட்டமாகும்

வெற்றுக்காகிதமும்   பட்டமாகும்


காகிதம் கனமற்றதுதான் 

அதிலுள்ளவரிகள் 

வலிமையானது 


எண்ணங்களின் வெளிப்பாடும் உணர்ச்சாகளின் உயிரோட்டமும் 


ஆழமான அர்த்தங்களும் அனுபவங்களும் பதிந்திருக்கும் 


மனிதனின் கற்பனைகளை காகிதத்தில் வார்த்தைகளாக்கிட்டான் 


உணர்வுகளை எழுத்துக்களில் பொறித்து நினைவூட்டினான் 


காகிதத்தில் சிந்திய பேனா மைதனை 


சாதாரணமாக என்னிவிடாதீர் 

பட்டைதீட்டிய வைரங்களவைகள் 


வெற்றுக்காகிதத்தில் மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருப்பேன் 


வெற்றி கனிபறிக்க நூல்பல கற்றிடுவீர் 


அழகாழ் பறந்திடலாம் பட்டமாய் உயரே 


அண்ணார்ந்து பார்த்திடட்டும் வெற்று காகிதத்தை



பட்டங்கள் பலபெற்று புழ்பெற்று பறக்குதென்று 


ஆசிரியர் கவிஞர் பா.தேவிகா

நாகப்பட்டினம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%