விவகாரம் !

விவகாரம் !



" ஐயா..வணக்கம்ங்க!"


" வாய்யா சின்னசாமி ! எங்க இவ்வ

ளவு தூரம் ?" 


" பக்கத்துல ஒரு வேலையா வந்தே

னுங்க. அப்படியே உங்கள பார்த்து

விசாரிச்சிட்டு போகலாமுன்னு...

ஐயா ரொம்ப கோபமா இருக்குற மாதிரி தெரியுது ?" 


" ஆமாய்யா ! விவகாரமா ஒண்ணுச்

சொன்னா காது கொடுத்துக் கேட் கணும் இல்லையா ?" 


" ஆமாங்க...யாருங்க ?" 


" என் பையனத்தான் சொல்றேன் !"


" அப்படிங்களா ?" 


" ஆமாய்யா ! பெத்தவன், அதுலயும் வயசானவன் சொன்னா கேட்கணும். நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கறதுன்னு இப்படி விட்டேர் த்தியான போக்குலயா இருக்கறது !"


" தப்புதாங்க ! ஏன் உங்க மகன் இப்படி

இருக்குறாருன்னுதெரியல்லீங்களே !"


" எல்லாம் புதுப்பொண்டாட்டி வந்திருக்காள்ங்குற திமிரு ! நான் கூடத்தான் சின்ன வயசில இருந் தேன். ஆனால் எங்கப்பா சொல்படி கேட்பேன். அவர் கிழிச்ச கோட்ட தாண்டமாட்டேன். என் பொண்டாட்டி சொல்றத எது எதுக்கு கேட்கணு

மோ அது அதுக்குத்தான் கேட்பேன்...." 


" ஐயா ! அந்தக் காலம் வேற இந்தக்

காலம் வேறங்க....." 


" அதுக்காக இந்தக் காலத்துல அப் 

 பன் பேச்சக் கேட்கக் கூடாதுன்னு 

எழுதி வச்சிருக்குதா ? என்னம்மோ பேச வந்துட்டே!" சிடு சிடுத்தார்.


" அய்யய்யோ.! நான் அப்படிச் சொல்ல

லீங்க ! சின்னப்பசங்க போக்கு வர வர

இந்தக் காலத்துல மாறிக்கிட்டு வர

துன்னு சொல்லவரேனுங்க !" 


" அப்படின்னா என் பையனுக்கு ஏத்தாப்பல நான் நடந்துக்கணும்னு சொல்றயா ?" 


" அப்படி இல்லீங்க. கொஞ்சம் விட்டுப்

பிடிக்கணும்னு சொல்றேங்க !" 


" ஏன்யா ! விவகாரமா ஒரு நல்ல விஷயம் பத்தி சொல்றேன். அவன் காது கொடுத்து கொடுத்து கேட்க மாட்டேங்குறான்னுதவிச்சுக் கிட்டி க்கிட்டிருக்கேன். நீ என்னம்மோ விட்டுப்பிடிக்கணுங்கறே !" 


" அப்படி இல்லீங்க ! கொஞ்சநேரம் கழிச்சு சொல்லிப்பாருங்க. நிச்சயமா கேட்பாரு !" 


" அப்படிங்குறே ?" 


" ஆமாங்க....ஐயா...வந்து.."தலையைச் சொரிந்தார் சின்னசாமி.


" என்னய்யா..உனக்கு என்ன வே

ணும் ?" எரிச்சலடைந்தார்.


" இல்லைய்யா..வந்து..ஏதோ விவ காரம்னு சொன்னீங்க ! அது என்ன

விவகாரம்னு சொன்னீங்கன்னா...?" 

என்று இழுத்தார் சின்னசாமி.


அசடு வழியக் கேட்ட சின்னசாமியை 

கடுப்புடன் பார்த்தவர், " அதான் ஆரம்பத்திலேர்ந்து சொல்லிக்கி

ட்டிருக்கேன்ல !" 


" அய்யா.! விவகாரம்னுதான் சொன் னீங்க ! அது என்ன விவகாரம்னு சொல்லலீங்களே ?" கெஞ்சல் கல

ந்த பரிதாபம் இழைந்தோடியது 

குரலில் ! 


" திருப்பித்திருப்பி எத்தன தடவை

யா சொல்றது ? ஒரு தடவை சொன்

னால் புரிஞ்சிக்க மாட்டே ?" 


" அய்யா! கடைசிவரை என்ன விவ காரம்னு சொல்லாமலே சமாளிச் சிட்டீங்க.நீங்க விவகாரமான ஆள் தான் !" வெறுப்புடன் சொல்லிவிட்டு நகர்கிறார் சின்னசாமி.


--வி.கே.லக்ஷ்மிநாராயணன்

          ...................................................

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%